
போட்டோஷாப் தெரிந்தவர்கள் இருக்கிற புகைப்படத்தை வைத்தே பாஸ்போர்ட்
உருவாக்குவார்கள். ஆனால் எந்த சிக்கலுமின்றி மென்பொருளின்றி எளிதாக பாஸ்போர்ட் உருவாக்க http://www.epassportphoto.com/ என்ற இணையதளம் பயன்படுகிறது. இதில் சிறப்பான விசயம் என்னவென்றால் உலகிலுள்ள எல்லா நாடுகளுக்கும் ஏற்ற அளவில் பாஸ்போர்ட் புகைப்படங்களை விசா, ஐடி கார்டு போன்ற தேவைகளுக்கு உருவாக்க முடியும்.
எப்படி பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை உருவாக்குவது ?
1. http://www.epassportphoto.com/ இணையதளத்திற்குச் சென்று Country என்ற பிரிவில் உங்கள் நாட்டைத் தேர்வு செய்யவும்.

(Passport, visa, ID card) என்ற மூன்று பிரிவுகளில் தேவையானதை தேர்வு செய்யுங்கள்.
3. பின்னர் கீழே உள்ள Get my Passport Photos என்பதைக் கிளிக் செய்யவும். இதன் பின் வரும் பக்கத்தில் புகைப்படங்களை எப்படி எடுக்க வேண்டும் என்று குறிப்பு தரப்பட்டுள்ளது. Browse என்பதைக் கிளிக் செய்து உங்களின் ஒளிப்படத்தைத் தேர்வு செய்து Next கொடுக்கவும்.

4. உங்கள் படம் அப்லோடு ஆனவுடன் Click and Drop என்பதைக் கிளிக் செய்து
தேவையான அளவுக்கு முகம் நன்றாகத் தெரிகிற மாதிரி தேர்வு செய்து விட்டு Next கொடுக்கவும்.


இணையதள முகவரி : http://www.epassportphoto.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக