உறவுகள் சில நேரங்களில் இனிமையாகவும் சில நேரங்களில் கடுமையாகவும்
முறிந்துவிடுவதுண்டு. எந்த முறையில் பிரிந்திருந்தாலும், உங்களுக்கு
அவர்களிடம் சிறிதளவு பரிவு இருக்கத் தான் செய்யும். உங்கள் உறவுமுறிந்த
பிறகும் இந்த உணர்வு உங்களை அவர்களுக்கு அழைப்பு செய்வதற்கு
கட்டாயப்படுத்திவிடும். உங்கள் உணர்ச்சி மதிக்கத்தக்கதாக இருந்தாலும்,
உங்கள் முன்னாள் காதலியை அழைப்பதற்கு சில வலுவான காரணங்கள் இருக்க
வேண்டும். அவர்களை நீங்கள் அழைத்ததற்கு சொல்லப்படும் காரணம் நம்பக்கூடியதாக
இல்லையென்றால் அது உங்கள் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி தவறான
எண்ணத்தை உண்டாக்கிவிடும்.
ADVERTISEMENT
உறவுமுறிவு என்பது இருவரது வாழ்விலும் கடினமான ஒன்றாகத் தான் இருக்கும்.
அதனால், நீங்கள் அவரை அழைத்ததற்காக சொல்லப்படும் வலுவான காரணம் அவர்களின்
வலிகளுக்கு மருந்தாக இருக்க வேண்டும். உங்கள் உறவு சந்தோஷமான முறையில்
முறிந்தாலும், அது கசப்பான வடுவைத்தான் விட்டு சென்றிருக்கும். அதனால்,
உங்கள் முன்னாள் காதலியை அழைப்பதற்கு முன், அவரை அழைத்ததற்கான வலுவான
காரணத்தை சொல்ல தயார் செய்து கொள்ள வேண்டும். நீங்கள் இருவரும் மீண்டும்
இணைவதில் எந்த தவறும் இல்லை. மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து சேர்ந்து
வாழ்ந்தால் அதிலும் தவறு இல்லை. கலந்து ஆலோசித்து மறுபரிசீலனை செய்யலாம்.
Excuses To Call Your Ex
உங்கள் முன்னாள் காதலியை அழைத்ததற்கு அற்பமான காரணமாகவோ அல்லது திட்டமிட்ட
காரணங்களோ இருக்கலாம். அது நீங்கள் அவரை அழைத்தற்கான நோக்கத்தை பொறுத்து.
நீங்கள் அவருடனான உறவை மறுபரிசீலனை செய்ய விரும்பினால், அவரின்
உறவினர்களின் நலம், வேலை சம்பந்தமான விஷயங்கள் போன்ற வலுவான காரணங்களை
தேர்வு செய்யலாம்.
வாழ்த்து
இது உங்கள் முன்னாள் காதலியை அழைத்தற்காக சொல்லப்படும் சாதுரியமான
காரணமாகும். அது அவருடைய பிறந்தநாள் அல்லது வேலை நிமித்த பதவி உயர்வு போன்ற
காரணங்களாக இருக்கலாம். இந்த காரணம் குற்றமற்ற காரணமாக இருப்பதால் தவறாக
எண்ண முடியாது.
உறவினர்களின் நலம் பற்றி கேட்பதற்கு
அவருடனான கடந்த கால உறவு பல உறவினர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தி
இருக்கும். அவர்களின் உறவினர்களில் யாரேனும் உடல் நலம் சரியில்லாமல்
இருந்தால், அதுவே நீங்கள் அவரை அழைத்ததற்கான வலுவான காரணமாக அமையும்.
நல்ல செய்தி தெரிவிப்பதற்கு
உங்களுக்கு வெற்றி கிட்டிஇருந்தாலோ அல்லது ஏதேனும் நல்லது நடந்திருந்தாலோ
அதனை தெரிவிப்பதற்கு அழைத்தீர்கள் எனக் கூறலாம். இது நீங்கள் அவரை
அழைப்பதற்காக சொல்லப்படும் வலுவான காரணங்களில் ஒன்றாக இருக்கும். இது
நீங்கள் இன்னமும் அவரை நண்பராக எண்ணுவதையும் உங்களின் வெற்றியின் போதும்
அவரிடம் கொண்டுள்ள அக்கறையை தெரிவிக்கும்.
செய்தியை தெரிவித்தல்
சில நேரங்களில் உங்கள் காதலிக்கு தெரிந்த முக்கியமான செய்தி பற்றி நீங்கள்
கேட்டறிவதற்கு அழைத்ததாகக் கூறலாம். இது அவரை அழைத்ததற்கான சிறந்த காரணமாக
இருக்கும். மேலும், இதன் மூலம் உங்களுக்கு வேண்டிய செய்தியை அறிவதற்கு அவர்
உதவி செய்யலாம். இது இயல்பான முறையில் பேசுவதற்கு சந்தர்பங்களை
ஏற்படுத்தும்.
உதவி
உங்கள் உறவு இனிமையான முறையிலோ அல்லது கசப்பான முறையில்
முறிந்திருந்தாலும், நீங்கள் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது
அழைத்தீர்கள் என்று சொல்லலாம். பெரும்பாலும் நேர்மறையான முறையிலேயே
பதிலளிப்பார்கள். உங்களின் பணப் பற்றாக்குறை அல்லது உங்கள் பர்ஸை
மறந்துவிட்டீர்கள் போன்ற குற்றமற்ற காரணங்கள் கூறி உதவி கேட்கலாம்.
மறுபரிசீலனை
ஆம்! சில நேரங்களில் நீங்கள் அவரை மறுபரிசீலனை செய்து மீண்டும் உங்கள்
வாழ்வில் இணைத்து கொள்ள விரும்பினால், அதனை ஒரு காரணமாகக் கூறலாம்.
அவர்களில் பதில் என்னவாக இருந்தாலும் உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது.
மாறி அழைத்துவிட்டீர்கள்
எந்த காரணமும் இல்லையென்றால், இதனை கூறி விடலாம். வேறு யாருக்கோ
அழைப்பதற்கு பதிலாக தெரியாமல் மாறி அழைத்து விட்டேன் எனக் கூறலாம். இது
பெரும்பாலும் எந்த பிரச்சனையையும் உருவாக்காது.
Read more at: http://tamil.boldsky.com/relationship/2013/12/excuses-call-your-ex-004583.html
Read more at: http://tamil.boldsky.com/relationship/2013/12/excuses-call-your-ex-004583.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக