உங்க தோட்டத்துல பாம்பு இருக்கா? கொஞ்சம் கவனிங்க!
தோட்டத்தில் ஈரப்பதம் அதிகமுள்ள இடங்களில்தான் பாம்புகள் குடிபுகும் எனவே சுத்தமாக தோட்டத்தை பராமரியுங்கள். அதேபோல் மரப்பொந்துகள், உடைந்த ஓடுகள் போன்றவைகளை குவித்து வைத்திருந்தாலும் அவை பாம்புகளுக்கு பிடித்தமான இடமாகிவிடும். எனவே முடிந்த வரை உடைந்து போன பொருட்களை தோட்டத்தில் குவித்து வைக்காதீர்கள்.
தோட்டத்தில் அதிக அளவில் புற்கள் இருந்தால் அங்கு பூச்சிகள், புழுக்கள் வளரும் எனவே தோட்டத்தில் புற்களை ஒரே சீராக வெட்டி விடவும். அதேபோல் ஒரே இடத்தில் ரோஜாச் செடிகளை புதர்போல வளர்ப்பதையும் தவிர்க்கவும்.
பாம்புகளுக்கு பூண்டு வாசனை அலர்ஜி எனவே பூண்டினை நசுக்கி தண்ணீரில் கரைத்து செடிகளின் மீது கரைத்து விடலாம்.
தோட்டத்தின் மூளையில் புதினா செடிகளை வளர்க்கலாம். ஏனெனில் புதினா வாசனை பாம்புகளுக்கு பிடிக்காது என்பதால் உங்கள் வீட்டுத் தோட்டத்தில் பாம்புகள் வர வாய்ப்பே இல்லை என்கின்றனர் தோட்டக்கலைத்துறையினர்.
பேபி ஷாம்புவை தண்ணீரில் கலந்து அதனை தோட்டத்தில் ஸ்ப்ரே செய்து விடலாம். மூன்று மணிநேரம் கழித்து மறுபடியும் செடிகளின் மீது தண்ணீர் தெளித்து விடலாம். இந்த வாசனை பாம்புகளுக்கு பிடிக்காது எனவே தோட்டத்தில் பாம்புகள் இருந்தாலும் அவை ஓடிவிடும். தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும் இந்த ஆலோசனைகளை பின்பற்றுங்களேன் உங்கள் தோட்டத்தில் அச்சமின்றி பொழுதை கழிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக